
在手机上保存,获得更好体验
என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனைக்
ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் கையில் ஏந்தி
சீராட்டிப் பாலூட்டித் தாலாட்ட
கையில் ஏந்தி
சீராட்டிப் பாலூட்டித் தாலாட்ட
என்ன தவம் செய்தனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் கையில் ஏந்தி
சீராட்டிப் பாலூட்டித் தாலாட்ட
என்ன தவம் செய்தனை
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்ப் பொத்திக் கெஞ்ச வைத்தாய் கண்ணனை
உரலில் கட்டி வாய்ப் பொத்திக் கெஞ்ச வைத்தாய் தாயே
என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை
சனகாதியர் தவ யோகம் செய்து
சனகாதியர் தவ யோகம் செய்து
வருந்தி சாதித்ததைப் புனித மாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை
வருந்தி சாதித்ததைப் புனித மாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை
யசோதா
யசோதா