Ini Oru Kadhal Seivom (Original Motion Picture Soundtrack)-Revaa

Ini Oru Kadhal Seivom (Original Motion Picture Soundtrack)

歌手:Revaa

时间:2022-07-04

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
歌词

இப்பெருவெளியில்

வருகிறேன்

அடர்த்தியான மவுனத் தோடும்

என் சின்னத்தனங்களுக்கான

மன்னிப்புகளோடும்

வா

இனி ஒரு காதல் செய்வோம்....

உதிரவே தெரியாத நம்

காதலின் இலைகளோடும்

கருகத் தெரியாத நம் காற்றின்

இசையோடும்

வருகிறேன்வா

இனி ஒரு காதல் செய்வோம் ...

அப்பழுக்கற்ற உன் சிரிப்பும்

புகார்கள் அற்ற உன் அன்பும்

பெரியதொரு தவறையும்

நொடியில் மறந்துவிடும்

உன் இயல்பும்

எனக்குத் தந்த பெரும்பலத் தோடு

வருகிறேன் வா

இனி ஒரு காதல் செய்வோம் ...

அன்பே

இப்போது என்னிடம்

இருப்பதெல்லாம்

உன்னைக் கண்டதும்

அவிழ்வதற்காக காத்திருக்கும்

சில கண்ணீர்த்துளிகளும்

தாங்க ஒண்ணா குற்றவுணர்வும்

உனக்காக தர வைத்திருக்கும்

பெருங்காதலும் மட்டுமே

கண்ணே

இனி ஒரு காதல் செய்வோம் ….

展开显示全部歌词