Oru Murai-Ram SK

Oru Murai

歌手:Ram SK

专辑:Oru Murai

时间:2023-02-14

    使用手机浏览器「扫一扫」

    在手机上保存,获得更好体验

标签
歌词

காற்றில் வீசும் புது வாசம் தந்ததும் நீயடி

காற்றாயாகினேன் தினம் உன்னை தொடவே

தூரமாகவே என்னை விட்டு நீயும் செல்லவே

உன் கண்கள் தேடியே கவிதை தான் கிறுக்கினேன்

என் நெஞ்சுக்குள்ளே இருக்கிற வலிகளும் ரணங்களும் உனக்கென்றும் புரியாதே

என்று நினைக்கும் போது உன் காதலின் ஆழம் என்னை புதிதாய் மாற்றியதே

உன் இசைகளும் வரிகளும் எனக்கே என்று எண்ணி எண்ணி தொலைத்து விட்டேன்

என் நினைவு முழுவதும் திருடி கொன்றால் எப்படி நான் மீழ்வேன்

காதல் வலிகளும் சுகம் தான் இங்கே தெரிந்து கொண்டதும் சிலர் தானே

பிரிவு இல்லாத உறவும் பொய்கள் காரணம் தேடுமே

தேடல் இல்லாத வாழ்க்கையில் இங்கே ஊடல் தான் கூடுமே

ஏக்கம் வந்ததும் தவிப்பதில் எவ்வித பயனுமிங்கில்லையே

முதன்முறை பார்த்ததும் என் நினைவில் இருக்கிறதே

உன் கவிதையால் எனையும் நீ கட்டிப்போடாயே

என்ன மாயம் தான் செய்து நீ எனையே ஈரத்தாயே

உன் முதல் வரி எனக்கென்று எனக்குள் கேட்டு கொண்டேன்

என்றும் அழியாத பாடல் நீயே தினம் உனையே கேட்பேன்

கேட்கும் போதெல்லாம் உந்தன் நினைவிலே தோற்று போனேன்

நீரில்லா நிலமாயானேன் நீயில்லா உலகில்

எனக்கென்றே ஆனவள் நீதானே பெண்ணே

கார்மேகம் போலேதான் உறவும் இங்கே

அதில் பொழியும் மழையை போல் அன்பும் எங்கே

காதல் இல்லாமலே யார் தான் இங்கே

பிரிவிலும் காதலை உணர்வோம் இங்கே

展开显示全部歌词